உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் பிரம்மோற்சவ விழா: கருடவாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

திரவுபதியம்மன் பிரம்மோற்சவ விழா: கருடவாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவம் முன்னிட்டு, உற்சவர் பெருமாள் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 4 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  கடந்த 11 ம்தேதி பாஞ்சாலன் அர்சுனனால் கட்டுண்ட உற்சவம், 12ம்தேதி அரக்கு மாளிகை உற்சவம், 13 ம்தேதி பக்காசூரன் உற்சவம், 14 ம்தேதி திருக்கல்யாணம் உற்சவம், 15 ம்தேதி பாண்டவர் வனம் புகுதல், 16 ம்தேதி அர்ச்சுனன் தபசு உற்சவம், 17 ம்தேதி மாடுபிடி சண்டை உற்சவம், 18 ம்தேதி அரவாண் கடபலி, வெள்ளையானை புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 19 ம்தேதி கர்ண மோட்சம் உற்சவத்தில் உற்சவர் பெருமாள் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நாளை (21 ம்தேதி) காலை அம்மனுக்கு சேலைகட்டுதல் நிகழ்ச்சியும்,  மாலை 5:00 தீமிதி திருவிழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !