உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

மாரியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, புணவாசிப்பட்டி பகுதியில், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், திருவிழா துவக்கப்பட்டு நேற்று காலை, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, புனிதநீர் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தனர். மேலும் வரும், 25ல் மாரியம்மன் தேர்த்திருவிழா மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !