ஜோதி வடிவில் முருகன் மே 1ல் வானில் அதிசயம்!
திருச்சி: உலக ஆன்மிகவாதிகள் நலம் பெறும் பொருட்டு முருகப் பெருமான் வரும், மே 1ல் இரவு, 9:00 - 12:00 மணிக்குள் வானில் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்று துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருச்சியில் அவர்கள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள, ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், 41 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறது. உலகில் மனிதர்கள் ஆட்சி முடிவுக்கு வந்து, ஞானசித்தர் ஆட்சி துவங்குவதற்கு சாட்சியாக, வரும், மே 1ல் இரவு, 9:00 - 12:00 மணிக்குள், முருகப்பெருமான் வானில் ஜோதி வடிவில் உலக மக்களுக்கு காட்சி தரவுள்ளார். முருகப்பெருமானின் ஆசி பெற விரும்பும் மக்கள், உயிர்க்கொலையை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு, சர்க்கரை, வெண்பொங்கல் மற்றும்
தெரிந்த உணவுப் பொருட்கள் செய்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்புடன் வழங்கினால், அன்று இரவு முருகப் பெருமானின் ஆசி பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த அறிவிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.