உத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா: ஏப்.30ல் கொடியேற்றம்
ADDED :3100 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,30ல் நடக்கிறது. பழமையும், புராதன சிறப்பையும் பெற்ற சிவாலயத்தில், ஏப்., 29 (சனிக்கிழமை) அனுக்ஞை விநாயகர் பூஜையும், ஏப்.30 காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மே7 மதியம் 3:00 முதல் 4:30 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பூத வாகனம், அன்னப்பறவை, காமதேனு, கிளி, யானை, நந்தீஸ்வரர், ரிஷப வாகனங்களில் உற்சவர்களின் வீதியுலா மற்றும் நாள் தோறும் இரவு பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மே. 10ல் குதிரை வாகனத்தில் மங்கைப்பெருமாள், கோவிந்தன் கோயில் எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.