புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 30 ம் தேதி லட்சார்ச்சனை
ADDED :3114 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், வரும் 30ம் தேதி ஏக தின லட்ச்சார்ச்சனை விழா நடக்கிறது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டுதோறும் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, லட்ச்சார்ச்சனை விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. அதையொட்டி ராகவேந்திரர் சுவாமிக்கு காலை 5 மணிக்கு சுப்ரபாதம், ஸ்தோத்திர பாராயணம், நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை லட்ச்சார்ச்சனையும், 1: 10 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 8 மணிக்கு ரதோத்தசவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ராகவேந்திரர் சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.