சித்திரை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்
ADDED :3115 days ago
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடினர். சித்திரை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்திற்கு, ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில், புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய, திதி பூஜை செய்த பின், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர், ராமநாத சுவாமி கோவில் உள்ள, 22 தீர்த்தங்களில், நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின், சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.