உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆய்வு!தமிழக கோவில்களில் ஆய்வு வருகிறது யுனெஸ்கோ குழு

ஆய்வு!தமிழக கோவில்களில் ஆய்வு வருகிறது யுனெஸ்கோ குழு

பாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, யுனெஸ்கோ குழு, ஆறு நாள் பயணமாக, நாளை தமிழகம் வருகிறது.

பாரம்பரிய கோவில்களில் புனரமைப்பு, பராமரிப்பு என்ற பெயரில், பழமை சிதைக்கப்படுவதாக, ஆன்மிகவாதிகள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, ஐ.நா., சபையின்,யுனெஸ்கோ என்ற,உலக பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு, 1967, 69ம் ஆண்டுகளில், தமிழக கோவில்களின்நிலை குறித்து ஆய்வு செய்துள்ளது என, மனுதாரர் கள் சுட்டிக்காட்டினர்.

அறநிலையத்துறை தரப்பில்,யுனெஸ்கோ என்ற அமைப்பு, இந்தியாவிலேயே இல்லை என, வாதிடப் பட்டது. ஆனால், இந்தியாவில், அந்த அமைப்பு இருப்பதையும், செயல்படுவதையும், மனுதாரர், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்பவர் ஆதார பூர்வமாக நிரூபித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் அறநிலையத் துறை கமிஷனர் மன்னிப்பு கோரினார். தமிழக பாரம்பரிய கோவில்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய, யுனெஸ்கோ அமைப்பிற்கு, உயர்நீதிமன்றம் பரிந் துரை செய்தது. அதை ஏற்று, யுனெஸ்கோ குழு, தமிழகத்தில், இரண்டு கட்டமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

முதல் கட்டமாக, ஆறு நாட்கள் சுற்றுப் பயணமாக, நாளை தமிழகம் வரவுள்ளது. வரும்,28ம் தேதி

காலை, மதுரைக்கு செல்லும்அந்த குழு, மீனாட்சியம்மன் கோவில்; திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்; நாங்குநேரி - வானமா மலை கோவில் உள்ளிட்ட பல இடங்களில், ஆய்வு நடத்துகிறது. மே, 3ம் தேதி, முதல் கட்ட ஆய்வு நிறைவு பெறுகிறது. அதன்பின், குழு தன் அறிக்கையை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !