ராசிபுரம் கருப்பனார் கோவில் திருவிழா பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :3123 days ago
ராசிபுரம்: பட்டணம், பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ராசிபுரம் அடுத்த, பட்டணத்தில் உள்ள பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. சித்திரை மாதம், இரண்டாவது புதன் அன்று, இரவு மட்டுமே விழா நடக்கும். துவக்க நிகழ்வான மஞ்சள் முடிப்பு, கடந்த, 14ல் நடந்தது. சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை, 5:00 மணியளவில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். கடந்த, பல ஆண்டுகளாக நடக்கும் விழாவில், ஆடம்பரத்தை தவிர்க்கும்
பொருட்டு, இதுவரையில் மைக்செட் கட்டப்படுவதில்லை. மின்விளக்குகள் மற்றும் வெடிவெடிக்கும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கிறது.