திருவத்திமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3122 days ago
செஞ்சி: மேல்தாங்கல் திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.செஞ்சி தாலுகா, மேல்தாங்கல் திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக தினவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலை சங்கல்பம், சிறப்பு ஹோமம், கலச அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆண்டாள் கோஷ்டிகளுடன் சுவாமி வீதிஉலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலமும், 6:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி,
வெங்கடாஜலபதிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. தொடர்ந்து இறை சொற்பொழிவும், நாடகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.