ராசிபுரம் திருவேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் பிரதிஷ்டை
ADDED :3114 days ago
ராசிபுரம்: சிங்களாந்தபுரத்தில், 12ம் நூற்றாண்டியில் கட்டப்பட்ட திருவேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேக விழா நடந்தது. ராசிபுரம்
அடுத்த, சிங்களாந்த புரம் பெரியகடைவீதியில் உள்ள பங்கஜவள்ளி உடனமர் திருவேஸ்வரர் கோவில், 12ம் நூற்றாண்டில் ராச கேசவ வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், 63 நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேகம் நேற்று காலை, 9:00 மணியளவில் நடந்தது. சிவனேச குருக்கள், மாதேஸ்வரன் குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். மாலை, 4:00 மணியளவில் வாத்தியங்கள் முழங்க ஆடியும், பாடியும் திருவீதி உலாவாக அடியார் பெருமக்கள் முக்கிய வீதிகளில் வந்தனர். விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.