உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் பெருமாள் கோவில்களில் ராமானுஜர் 1,000வது விழா

சேலம் பெருமாள் கோவில்களில் ராமானுஜர் 1,000வது விழா

சேலம்: பெருமாள் கோவில்களில், ராமானுஜர், 1,000வது ஆண்டு  பூர்த்தி வைபவ விழா நேற்று நடந்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில், ராமானுஜரின் உற்சவ சிலைக்கு, நேற்று மாலை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், ராமானுஜரின் தத்துவம் மற்றும் கொள்கையை விளக்கும் வண்ணம், தான் உகந்த திருமேனி, தமர் உகந்த திருமேனி, தானே ஆன திருமேனி தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் உள்ள ராமானுஜருக்கு, அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, தங்கக்கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. ராமானுஜர் ஆலயத்தைச்சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மாபேட்டை, முராரி வரதய்யர் தெருவில் உள்ள தென்னாச்சார்ய மடத்தில், ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் சாத்துபடி செய்யப்பட்டது. அம்மாபேட்டை,
கன்னடவீர சைவ சைனீகர் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி யில்,  108 திவ்யதேச பெருமாள் கோவில்களில் உள்ள சுவாமிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டபம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள்,  சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி, அன்னதானப்பட்டி பெருமாள், பட்டைக்கோவில்களில், ராமானுஜர் விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !