புதன்சந்தை மாரியம்மன் கோவில் பண்டிகை துவக்கம்
ADDED :3115 days ago
புதன்சந்தை: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகிலுள்ள செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் பண்டிகை துவங்கியது. இன்று மதியம், மாரியம்மனுக்கு இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. நாளை (மே 3) மாலை பூக்குழி இறங்குதல், இரவு சமூக நாடகம் நடக்கிறது. வரும், 4 காலை பால்குடம் எடுத்தல், மதியம் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் வீதி உலா, இரவு சமூக நாடகம் நடக்கிறது. வரும், 5ல் மஞ்சள் நீராடல், மறு அபிஷேகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.