உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு ராஜா கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்

ஈரோடு ராஜா கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்

ஈரோடு: ராஜாகாடு கருப்பண்ணசாமி, ஸப்த கன்னிமார் கோவில்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு, ராஜாகாடு பகுதியில், ராஜா கருப்பண்ணசாமி, ஸப்த கன்னிமார் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் மிதுன லக்கனத்தில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றினர். அதைத் தொடர்ந்து மூலவருக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாரதனை நடந்தது. விழாவில் மாநகரின்  பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !