தான்தோன்றிமலையில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா
தான்தோன்றிமலை: தான்தோன்றிமலையில் அமைந்துள்ள ராமானுஜருக்கு, ஆயிரமாவது நிறைவு விழாவை முன்னிட்டு, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ராமானுஜர் ஆயிரமாவது விழாவை முன்னிட்டு, பல்வேறு விழாக்களுக்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. கோவிலை நிர்வகிக்கும் தான்தோன்றிமலை துவக்கப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியை ஜோதி, 71, அவரது தங்கை வரலட்சுமி, 66, ஆகியோர் கூறியதாவது: ஸ்ரீ
பெரும்புதூரில் பிறந்து வாழ்ந்து, பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்திய ராமானுஜர், இறுதியில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜீவ சமாதி அடைந்தார். கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கோவில்
செல்லும் வழியில் ராமானுஜர் அமர்ந்து, லட்சுமி, நரசிம்மர், அங்கையற்கன்னி காட்சியளிக்க வேண்டி பாதாள இடத்தில் அமர்ந்து விட்டார். இதையறித்த லட்சுமி, நரசிம்மர், அங்கையற்கன்னி மூவரும் நேரில் வந்து ராமானுஜருக்கு சேஸவை சாதித்தனர். ஆகையால், இந்த இடம் பாதாள லட்சுமி, நரசிம்மர் பெருமாள் கோவில் என்றழைக்கப்படுகிறது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு, காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை எண்ணெய், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சகற்பூர அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.