கரூர் கொடியேற்றத்துடன் ரெங்கநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
கரூர்: கரூர், அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில், சித்திரை திருவிழாவின் முதல் நாளில் துவஜாராஹணம் என்ற கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. கொடியேற்றத்துக்கு பின், தினமும் ரெங்கநாதசுவாமி இரவில் ஒவ்வொரு நாளாக
சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், வெள்ளி கருடவாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஒன்பதாம் நாளன்று, நம்
பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பத்தாம் நாளில், நம்பெருமாளுக்கு அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. பதினொராம் நாளில் ஆளும் பல்லாக்கு உற்சவம், 12ம் நாளில் ஊஞ்சல் உற்சவம், கடைசி நாளில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் நடக்கிறது. சித்திரை திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைத்துறை இணை
ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.