கிருஷ்ணராயபுரம் ஆனந்த விநாயகர், ஆற்றங்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3115 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள திருக்காம்புலியூர் பஞ்சாயத்து பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆனந்த விநாயகர் ஆற்றங்கரை விநாயகர் லாட சன்னியாசி
ஆகிய கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர் பஞ்., பகுதியில் புதிதாக ஆனந்த விநாயகர் மற்றும் ஆற்றங்கரை விநாயகர்
கோவில்கள் கட்டப்பட்டன. கும்பாபி?ஷக விழாவை முன்னிட்டு, யாக சாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் கும்ப பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, 9:15 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், மேட்டு திருக்காம்புலியூர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.