ஈரோடு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு
ADDED :3115 days ago
ஈரோடு: சமயபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, இன்று துவங்குகிறது. ஈரோடு பாலக்காட்டு மேடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா, இன்று இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம், 10ல் மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நடக்கிறது. மே, 11ல் கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.