உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நாகை : நாகை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கோகிலாம்பிகை சமேத உத்வாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

தேவாரப் பாடல்பெற்ற இக்கோயில் திரு மணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து தீபம் ஏற்றி சுவாமி, அம்பாளை வழிபட்டால் திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வர ன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று, அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் எ ன்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த கோயிலில் சித்திரை விழா கடந்த 30ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கோகிலாம்பால் சமேத உத்வாகநாத சுவாமிக்கு திருக்கல்யானம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பல்லக்கில் வந்து கோயில் வசந்த மண்டபத்தில் எழுந் தருள சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாற்றுதல். ஊஞ்சல் வைபவமும், சிவ ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி, அம்பாளுக்கு நலங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளி ட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !