உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விரன்மீண்ட நாயனார் குருபூஜை வழிபாடு

திருப்பூர் விரன்மீண்ட நாயனார் குருபூஜை வழிபாடு

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், விரன்மீண்ட நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. நாயன்மார்களில் ஒருவரான, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி
கோவிலில், விரன்மீண்ட நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. சேரநாட்டு, செங்குன்றூரில் அவதரித்த, விரன் மீண்ட நாயனார், திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்திருந்த
சிவனடியார்களை வணங்காமல், சுந்தரரை பகைத்து, திருத்தொண்டத்தொகை பாடுவதற்கு காரணமாக அமைந்தனர். சிவனடியார்களை வணங்கிய பிறகே, கோவிலுக்கு செல்லும்
வழக்கம் உடையவர். திருத்தொண்டத்தொகை திருப்பதிகம் உருவாக காரணமாக அமைந்த, விரன்மீண்ட நாயனார் குரு பூஜை நேற்று நடந்தது. தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சிவனடியார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !