புதுச்சேரி எல்லையம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :3117 days ago
புதுச்சேரி : புதுச்சேரி சின்னக்கடை எல்லையம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி விழா துவங்கியது. 10ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
புதுச்சேரி சின்னக்கடை எல்லையம்மன் கோவில், 10 நாட்கள் சித்ரா பவுர்ணமி செடல் திருவிழா, கடந்த 1ம் தேதி துவங்கியது. தினமும் சாமிக்கு அலங்கார ஆராதனைகள் மற்றும் வீதியுலா நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் 10ம் தேதி அன்று நடக்கிறது. அன்று காலை 9:00 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலை 4:30 மணிக்கு செடல் சந்தன அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.