திருக்கனூர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3118 days ago
திருக்கனூர் : திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
திருக்கனூர் அடுத்த தமிழக பகுதியான திருமங்கலம் கிராமத்தில் சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 3ம் ஆண்டு சுவாமி திருகல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
முதல்வர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, சிதம்பரேஸ்வரர் சுவாமி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.