ஆத்தூரில் மழை வேண்டி வருண யாக சிறப்பு பூஜை
ADDED :3118 days ago
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தெற்குகாடு மாரியம்மன் கோவிலில், வருண ஜெப யாக பூஜை நேற்று நடந்தது. கடும் வறட்சி நிலவும் சூழலால், ஆங்காங்கே கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் சாகுபடி செய்த பயிர்களை, காப்பாற்ற போராடி வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் கோவில்களில், வருணபகவானிடம் மழை வேண்டி பூஜைகள், வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன்படி, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தெற்குகாடு பஸ் ஸ்டாபில் உள்ள மகா மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில்களில் வருண ஜெபயாகம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாரியம்மன் கோவிலில், வருண ஜெப யாகம் நேற்று நடந்தது. நேற்று காலை, 7:30 மணி முதல் சிவாச்சாரியார்கள், ஏழு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் அமர்ந்து ஒரு லட்சம் வருண மூலமந்திர ஜபம் செய்தனர். பின், ?ஹாமம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.