உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா துவக்கம்

மானாமதுரையில் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா துவக்கம்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக கருதப்படும் சதாசிவ பிரமேந்திராள் சன்னதி உள்ளது. ஆண்டு தோறும் கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தும் வகையில் ஆராதனை விழா நடைபெறும். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வாய்ப்பாட்டு, வயலின்,மிருதங்கம்,மாண்டலின் போன்ற இசைக்கச்சேரி நடத்த உள்ளனர். நேற்று நடைபெற்ற வாய்ப்பாட்டு நிகழ்ச்சியில் அபிஷேக் ரகுராம் பாடினார்.மிருதங்க வித்வான்கள் சாய்கிரிதர்,குருராகவேந்திரா மிருதங்கம் வாசித்தனர்.விஜய் கணேஷ் வயலின் வாசித்தார். வரும் 5ந்தேதி காலை குரு அஞ்சலி,கோஷ்டி கானம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !