ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ADDED :3119 days ago
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் 92ம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் பல்லக்கில் கொடி ஊர்வலமும் அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது.
மே 8 வரை தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும். மே 9ல் அம்மன் சிம்ம வாகனத்திலும், மே 10ல் அன்னவாகனத்திலும், மே 11ல் முத்துப்பல்லக்கிலும், மே 12ல் பூப்பல்லக்கிலும்மின்னொளியிலில் வீதி உலா வருகிறார்.