தேனி கண்ணகி கோயில் திருவிழா மே 10,12ல் உள்ளூர் விடுமுறை
தேனி: கேரள மாநில எல்லை குமுளி அருகே கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா மே 10ல் நடைபெறுகிறது. இதனை யொட்டி அன்று மாநில அரசு அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் பொருட்டு மே 20 சனிக்கிழமை பணி நாளாக கருதப்படும்.
12ல் விடுமுறை: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 9முதல் 16 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக 12ல் தேரோட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்ய ஜூன் 3 சனிக்கிழமை பணி நாளாக கருதப்படும். இரு விடுமுறை நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம், சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும், என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.