உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா

கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா

கம்பம்:  கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி, காவடி, பால்குடம் எடுத்தல் என பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். கம்பம் கவுமாரியம்மன் கோயில் 21 நாட்கள் சித்திரை திருவிழா ஏப். 19 ல் கொடியேற்றத்துடன்துவங்கியது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறுகிறது.

விதவிதமானஅலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருவார்.நேற்று முன்தினம் காலை அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சிதுவங்கியது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்தல்,காவடி, அலகு குத்தி ஆடி வருதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது.கோயிலில் பிரகாரத்திற்கு எதிரில் வைக்கப்பட்டுள்ள மூன்று கிளைகளை கொண்ட வேப்பம் கம்புக்கு எலுமிச்சை மாலை மற்றும் மல்லிகை பூ அணிவித்து, பெண்கள் வழிபட் டனர். திருவிழா மே 9 வரை நடைபெறும். ஏற்பாடுகளை கிராமக்கமிட்டியினர், செயல்அலுவலர் செந்தில்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !