அந்தியூர் கருமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ADDED :3117 days ago
அந்தியூர்: அந்தியூரை அடுத்துள்ள மொடக்குறிச்சானூர் கருமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. கடந்த மாதம், 4ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. பெண்கள் கம்பத்திற்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா காலை, 9:00 மணிக்கு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்தும் மாலையில் மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது. சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து ஏராளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.