பர்கூர் மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3117 days ago
பர்கூர்: பர்கூர் துரைஸ் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மே, 1ல் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பெண்களுக்கான கோலப்போட்டியும், மதியம், 1:00 மணிக்கு மா விளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 2:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், 3:00 மணிக்கு தீ மிதித்தல், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இன்று (மே 4) மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.