உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கத்திரி வெயிலை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம்

கத்திரி வெயிலை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம்

திருவண்ணாமலை: கத்திரி வெயிலை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு, தாராபிஷேகம் செய்யப்படுகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயில் துவங்கியது. இதையொட்டி, அருணாசலேஸ்வரரின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக,  வரும், 28 வரை, தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்ட தாரா பாத்திரத்தில், வெற்றிவேர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை துளித்துளியாய் அருணாசலேஸ்வரரின் திருமேனியில் விழுந்து அபிஷேகம் செய்விக்கும் வகையில் பொருத்தப்பட்டது. அக்னி நட்சத்திரத்தின் நிறைவு நாளில், சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. இதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !