ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்
ADDED :3116 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலில் 10 நாள் வசந்தஉற்சவம் துவங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் துவக்கத்தை முன்னிட்டு, கோடையில் வெம்மை தணிந்திடவேண்டி நடக்கும் இந்த வசந்த உற்சவத்தில், தினமும் காலை 11 மணியவில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்குமேல் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் வசந்த உற்சவமும்நடக்கும். அப்போது திருமேனி முழுவதும் சந்தனம் பூசி, மாலை சூடி காட்சியளிப்பார். நிறைவுநாளான சித்ராபவுர்ணமியன்று ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் குதிரை வானத்திலும் எழுந்தருளி ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா ஆகியோர் செய்துள்ளனர்.