உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ.2.29கோடி

பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ.2.29கோடி

பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில், 21நாட்களில் ரூ.2கோடியே 29 லட்சத்து 63ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் உண்டியல் இரண்டாம்நாள் எண்ணிக்கையில் ரொக்கம் ரூ. 59லட்சத்து 14 ஆயிரத்து 464ம், தங்கம்-103கிராம், வெள்ளி-9,800 கிராம், வெளிநாட்டுக் கரன்சி- 82ம் கிடைத்துள்ளது. முதல்நாள் கிடைத்த ரொக்கம் ரூ.1கோடியே 70லட்சத்து 49ஆயிரத்துடன் சேர்த்து 21 நாட்களில், மொத்தம் ரூ.2கோடியே 29 லட்சத்து 63ஆயிரம் கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !