திருச்செந்தூரில் ரூ.38.50 லட்சத்தில் புதிய தளம்
ADDED :3117 days ago
திருச்செந்தூர்ர்: திருச்செந்தூர், நாழிக்கிணறு பகுதியில் 38.50 லட்சம் ரூபாயில் புதிய தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருகே கடற்கரை பகுதியில் உள்ள நாழிக்கிணறு புண்ணிய தீர்த்தமாகும். கோயில் முகப்பில் இருந்து நாழிக்கிணறு வரையிலும் நடந்து செல்லும் பாதையை ஒட்டி, கடற்கரை மணலில் புதிதாக சிமெண்ட் தளம் அமைக்கும் பணி நடக்க உள்ளது.90 மீட்டர் நீளத்தில், கடற்கரையை நோக்கி 10 மீட்டர் அகலத்தில் அமையும் இந்த தளத்தில் பக்தர்கள் அமர்ந்து கடலை பார்க்கலாம். 38 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடக்க உள்ள இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கோயில் இணை ஆணையர் வரதராஜன், தக்கார் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.