சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் பூக்குழி விழா
ADDED :3116 days ago
சாயல்குடி சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பூக்குழி உற்சவம் நடந்தது. கடந்த ஏப்., 25 ல் காப்பு கட்டுதலுடன் நாள் தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சாயல்குடி பெரிய கண்மாயில், பாரியை கங்கை சேர்க்கப்பட்டது. பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.