உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் சித்ர குப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

திருப்பூர் சித்ர குப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

திருப்பூர் : சின்னாண்டிபாளையம், ஸ்ரீ சித்ர குப்தர் சித்ரா பவுர்ணமி பூஜை, வரும், 10ல் நடக்கிறது. திருப்பூர், மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையத்தில், எமதர்ம ராஜாவின் கணக்கரான ஸ்ரீ சித்ர குப்தர், தலைப்பாகை அணிந்தபடி, வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் சுவடியுடன், கணக்கு எழுதும் கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சித்தர குப்தர் அவதரித்த சித்திரை பவுர்ணமி பொங்கல் விழா, வரும், 10ல் நடக்கிறது. இதையொட்டி, 9ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீ சித்ர குப்தர் திருவீதி உலா, பால் குட ஊர்வலம், அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீ சித்ர குப்தர் சிறப்பு பூஜை, யாக பூஜை, மகா வேள்வி, தீபாராதனை நடக்கிறது. காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், ஸ்ரீ சித்ர குப்தருக்கு, 16 விதமான அபிஷேகங்கள், புனித கலச நீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பகல், 11:00 மணிக்கு கூனம்பட்டி ஆதீனம், ஸ்ரீ நடராஜ சுவாமிகள் அருளாசி மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !