உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் பிரசாத கடை மீண்டும் ஏலம்

திருத்தணி முருகன் கோவில் பிரசாத கடை மீண்டும் ஏலம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி மற்றும் பிரசாத கடை ஏலம், மீண்டும் வரும் 10ம் தேதி நடத்தப்படுகிறது என, கோவில்
நிர்வாகம் அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

அர்ச்சனை பொருட்கள்: பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி, மலைக்கோவிலில் உள்ள பிரசாத கடை, உப்பு, மிளகு கடை, வில்வம், தும்பை பூ, மலர்மாலை மற்றும் அர்ச்சனை
பொருட்கள் விற்பனை உட்பட பல்வேறு கடைகளுக்கு கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை, பொதுஏலம் விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேற்கண்ட வகை இனங்களுக்கு,
கடந்த மாதம், 20 மற்றும் 21ம் தேதி தலைமை கோவில் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது.

கடந்த ஆண்டை விட, ஏலத்தொகை 15 சதவீதம் கூட்டி ஏலம் விடப்பட்டது. மேற்கண்ட
இனங்களுக்கு யாரும் ஏலம் எடுப்பதற்கு முன்வராததால், மறுதேதி இன்றி கோவில் நிர்வாகம் ஏலம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்து அறநிலைய துறையின் ஆணையரின் அனுமதி பெற்று மறுஏலம் நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்து ஏலதேதி அறிவித்துள்ளது. அந்த வகையில், வரும், 9ம் தேதி, காலை, 11:30 மணிக்கு உப்பு, மிளகு கடை, வில்வம், தும்பை பூ, மலர்மாலை மற்றும் அர்ச்சனை பொருட்கள் விற்பனை ஆகிய கடைகளுக்கு
ஏலம் விடப்படுகிறது.

ஏலத் தொகை: மறுநாள், 10ம் தேதி, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும், தலைமுடி மற்றும் பிரசாத கடை ஏலம், காலை, 11:30 மணிக்கு, அதே தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
தலைமுடிக்கு, 2.50 கோடி ரூபாயும், பிரசாத கடைக்கு, 1.50 கோடி ரூபாயும் என, ஏலத் தொகையை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !