உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

சிறுபாக்கம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த ம.குடிக்காடு மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுபாக்கம் அடுத்த ம.குடிக்காடு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் செவ்வாடை அணிந்து, பால்குடம் சுமந்து, அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், ஆகாசதுரை சுவாமிக்கு கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !