உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை மகிழ்விக்கும் கோலாட்டம் ஆடும் சிறுமிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை மகிழ்விக்கும் கோலாட்டம் ஆடும் சிறுமிகள்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில் கோலாட்டம் ஆடும்  சிறுமிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.மதுரை என்றாலே நினைவுக்கு வருவது திருவிழாக்கள் தான். அதிலும் சித்திரைத் திருவிழாவைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் நாளில் களை கட்ட துவங்கும்  இத்திருவிழா, பன்னிரண்டாம் நாள் வரை உற்சாகக் குறைவின்றி பயணிக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக மண்ணின் மைந்தர்கள் திகழ்கின்றனர். அம்மனை மகிழ்விக்கும் விதமாக, ஊர்வலத்தின் போது சுவாமி வேடமிடுதல், கோலாட்டம் ஆடுதல் போன்றவற்றை
செய்கின்றனர். இது பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !