உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோவில் குளம் தூர்வாரும் பணி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை கோவில் குளம் தூர்வாரும் பணி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை:மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் குளம், தி.மு.க., சார்பில், நேற்று தூர்வாரப்பட்டது.மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் குளம் தூர்வாரப்படாமல், முற்றிலும் செடி, கொடிகள் முட்புதர்களில் மண்டிக் கிடந்தன. இந்த குளத்தை தூர்வாரினால், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதுகுறித்த பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, தி.மு.க., சார்பில், எல்லையம்மன் கோவில் குளத்தை தூர்வார இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை, 7:00 மணியளவில் குளத்தை தூர்வாரும் பணி துவங்கியது. இதில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., -மா.சுப்பிரமணியன்
ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான இளைஞர்களும், பகுதிவாசிகளும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.குளத்தை தூர்வாரும் பணியை துவக்கி
வைத்த பின், ஸ்டாலின் கூறியதாவது:

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறி விட்டது. தமிழகத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பொதுமக்கள் உதவியுடன், தூர்வாரும் பணியில், தி.மு.க.,வினர் ஈடுபட வேண்டும். அ.தி.மு.க., அரசு மக்கள் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. தங்கள்
பதவியை காப்பாற்ற அமைச்சர்கள் பாடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !