மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 6,000 பேர் இலவச தரிசனம்
மதுரை:மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு தெற்கு கோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு 6000 பேர் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மணமேடை 100 டன் ஏ.சி. வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதியில் 300 டன் ஏ.சி. வசதி செய்யப்பட்டது. மேற்கு கோபுரம் காலை 7:00 மணிக்கு மூடப்பட்டது. 500 ரூபாய் கட்டண டிக்கெட் வைத்திருந்தோரை அனுமதிக்கவில்லை. கிழக்கு
கோபுரம் வழியாக வி.ஐ.பி.,க்கள், அரசு அதிகாரிகள், பாஸ் இல்லாத பலர் அனுமதிக்கப்பட்டனர். கோயில் உட்பிரகாரம், சித்திரை வீதிகளில் 20 இடங்களில் எல்.சி.டி., திரையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், போலீசார் குடும்பத்தினருக்கு தனி கேபின் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் தாலிக்கயிறை மாற்றிக்கொண்டனர்.
* 50 ரூபாய், 100 ரூபாய் திருக்கல்யாண மொய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி ரசீது பெற்றனர். திருக்கல்யாண தாம்பூலம் வழங்கப்பட்டது. சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தனியார் டிரஸ்ட் சார்பில் திருக்கல்யாண விருந்து காலை முதல் மாலை வரை
நடந்தது.
* மேற்கு கோபுரம் வழியாக காலை 7:15 மணிக்கு கோயிலுக்குள் செல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் உதவியாளரை போலீசார் அனுமதிக்கவில்லை. என்னை தடுக்கும் உங்கள் பெயர்
என்ன?. என உதவியாளர் கேட்டார். அதற்கு நான் கோயில் உதவி கமிஷனர் கண்ணதாசன். அனுமதிக்க முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், என்றார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணம் குன்றம் முருகன் புறப்பாடு திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம் (மே 7) நடந்தது. அதில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டனர். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 10ல் மதுரை சுவாமிகளிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும்.மே 11 காலையில் சுவாமி, தெய்வானை புறப்பாடாகி,
தெற்காவணிமூல வீதி மண்டபத்தில் எழுந்தருளி, மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை கோயிலில் பெருமாளை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயில்
திரும்புவர். கோயில் வழக்கம் போல் திறந்திருக்கும். மே 11 வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை.