உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவிலில் திருக்கல்யாணம்

கோவை கோவிலில் திருக்கல்யாணம்

கோவை : சேரன்மாநகர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நேற்று விமர்சையாக நடந்தது.கடந்த ஏப்., 27 கணபதி ஹோமத்துடன் சித்திரை திருவிழா
துவங்கியது. ஏப்., 28 கொடியேற்றம், மே 5ல் அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. நேற்று காலை சீர்வரிசைகள் விக்னேஷ் நகர் ஸ்ரீ வரசித்தி விநாயகர், வரதராஜ பெருமாள், மகாலட்சுமி கோவில் இருந்து புறப்பட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை
வந்தடைந்து திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.

இன்று சிறப்பு பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவடைகிறது. முன்னதாக விழாவை முன்னிட்டு மயில், யானை, சூரியபிரபை, சந்திர பிரபை, குதிரை, அன்னப்பறவை உள்ளிட்ட பல்வேறு வாகன அலங்காரங்களில், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !