உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழா அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழா அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெரு விழாவையொட்டி அடிப்படை வசதிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி மாலை 5.15 மணிக்கு சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழாதுவங்கியது.

இன்று(8 ம் தேதி) கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய திருவிழாவான 9ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.இதில் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள்
பூசாரிகளின் கைகளால் தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். 10ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

விழாவையொட்டி அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, தங்கும் அறைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்து துரிதப்படுத்தினார்.

கோவில் அருகே உள்ள குடிநீர் மேல்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் வகையில், பி.டி.ஓ., முருகனிடம் உடனடியாக போர்வெல் அமைத்த தர வேண்டும் என்று எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
ஆய்வின் போது, ஒன்றிய செயலாளர் செண்பகவேல், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வெள்ளிகண்ணு, முத்துலட்சுமிதயாநிதி,
நிர்வாகிகள் பாஸ்கர், ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !