உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தநாயக்கன்பாளையம் ஐம்பொன் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

பெத்தநாயக்கன்பாளையம் ஐம்பொன் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

பெத்தநாயக்கன்பாளையம்: ஐம்பொன் சிலைகளுக்கு, சிறப்பு பூஜை  நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்யாணகிரி, தேன்மலை சிவாலயத்தில், ஐம்பொன்னால் ஆன ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய உற்சவமூர்த்திகள் புதிதாக செய்யப்பட்டன.
அவற்றிற்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு மேல், பால், இளநீர், தயிர், திருமஞ்சனம், குங்குமம், திருநீறு ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. அதில்,
பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !