பழநியில் இலவச பஞ்சாமிர்தம் முதல்வர் துவக்கினார்
ADDED :3280 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில், இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கிவைத்தார். திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதுபோல, பழநி முருகன் மலைக்கோயிலில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட உள்ளது. தினமும் மாலை 5:30 மணி சாயரட்சை பூஜைக்குப்பின் 2000 பக்தர்களுக்கு, தலா 20 கிராம் வீதம், தொன்னையில் வழங்கப்படும். மலைக்கோயிலில் நன்கொடையாளர் வரவேற்பு மையம் அருகே பக்தர்கள் இதனை பெறலாம்.
இத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று காலையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, உட்பட கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர்.