உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சித்திரை மாத திருவிழா

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சித்திரை மாத திருவிழா

ராசிபுரம்: ராசிபுரத்தில், சித்திரை மாத தேர்த் திருவிழாவில் கைலாசநாதர் திருத்தேர் வடம் பிடித்தல் திருவிழா நேற்று நடந்தது. ராசிபுரம், தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத அருள்மிகு
கைலசாசநாதர் கோவிலில், சித்திரை திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு, இந்து அறநிலையத்துறை சார்பில், திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 4:00 மணிக்கு வார வழிபாட்டு சங்கம் சார்பில், கைலாசநாதருக்கு
அபிஷேகம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு ரிஷப லக்னத்தில் சுவாமி அம்பாள் ரதத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை, 3:45 மணிக்கு ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேரடியில் நிறுத்தப்பட்டுள்ள திருத்தேரில் உற்சவர் கைலாசநாதரை அமர்த்தி வடம் பிடித்து இழுத்தனர். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமாக பொதுமக்கள் தேரை இழுத்தனர். நாளை மாலை, 6:00 மணிக்கு தேர் நிலை சேர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !