உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்

பவானி: சங்கமேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழாவில், ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் நேற்று நடந்தது. பவானி, சங்கமேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த் திருவிழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 5ல், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார் புறப்பாடு நடந்தது. நேற்று காலை, 5:00 மணியளவில், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை,
9:30 மணியளவில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !