புன்செய்புளியம்பட்டி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3116 days ago
புன்செய்புளியம்பட்டி: காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, நேற்று துவங்கியது. புன்செய்புளியம்பட்டி, காமாட்சியம்மன் கோவில், சித்திரைத் திருவிழா நேற்றிரவு,
கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து கம்பத்தை சுற்றி, பக்தர்கள் ஆடும் ஒயில் கும்மி நிகழ்ச்சி, தினமும் நடக்கும். வரும், 11ல், படைக்கலத்துடன் தீர்த்தகுடம், முளைப்பாலிகை எடுத்தல், அம்மை அழைப்பு நடக்கிறது. மே, 12ல் காமாட்சியம்மன் -
ஏகம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு பூஜை, அரண்மனை பொங்கல் விழா நடக்கிறது. அன்று மாலை, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பக்தர்கள் அலகு குத்தி தேர்
இழுத்தல் நடக்கிறது. அதன்பின், சுவாமி திருவீதி உலா நடைபெறும். வரும், 13ல், மஞ்சள் நீராட்டு, 15ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.