உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கொடுமுடி: மகுடேஸ்வரர் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, கடந்த ஏப்.,30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, மே, 1 முதல், 7 வரை நாள்தோறும் சிவன், பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை,  திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்
நேற்று நடந்தது. காலை, 9:06 மணிக்கு, நூற்றுக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் அலங்கரிக்கப்பட்ட தேரில், பெருமாள் சுவாமி இழுத்துச் செல்லப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் வீதி, கடைவீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி, கோவிலை தேர் வந்தடைந்தது. இதேபோல் சிவனும் அலங்கரிக்கப்பட்ட தேரில்,
கோவிலை வந்தடைந்தார். மக்கள் சார்பாக, மதியம், 12:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. இன்று (9ம் தேதி) நடராஜர் தரிசனம், சிவன், பெருமாள் சுவாமி புறப்பாடு, சூலதேவர், சக்கரத்தாழ்வார் காவிரியில் தீர்த்தவாரி, கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (10ம் தேதி) சிவன், பெருமாள் புஷ்ப பல்லக்கு மற்றும் விடையாற்றி உற்சவத்துடன், சித்திரை தேர்விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !