பிரத்தியங்கிராதேவி கோவிலில் வரும் 14ல் தீமிதி திருவிழா
ADDED :3116 days ago
ஊத்துக்கோட்டை: ஒதப்பை கிராமத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி கோவிலில், 27ம் ஆண்டு, சித்திரை பவுர்ணமி விழா கோலாகலமாக துவங்கியது.பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ளது ஓம்சக்தி ராஜேஸ்வரி அம்மன், பிரத்தியங்கிராதேவி, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதத்தில் பவுர்ணமி விழா நடப்பது வழக்கம். நேற்று, 27ம் ஆண்டு, சித்திரை பவுர்ணமி, தீமிதி திருவிழா, நேற்று, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கியது.நேற்று முதல், வரும், 15ம் தேதி வரை, கிராம தேவதைக்கு பொங்கல் வைத்தல், அம்மன் ஊஞ்சல் சேவை, வேப்பபை கரகம் வீதி உலா, தீமிதி திருவிழா, அம்மன் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும், 12ம் தேதி முதல், மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.