உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரட்டையாக ஒட்டியிருக்கும் வாழைப்பழம் அல்லது காயை பயன்படுத்தக்கூடாதா?

இரட்டையாக ஒட்டியிருக்கும் வாழைப்பழம் அல்லது காயை பயன்படுத்தக்கூடாதா?

பொதுவாக, இதுபோன்று இரட்டையாக உள்ள பழங்களையோ காய்களையோ நாம் உண்ணும்போது நமக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளிலேயும் அந்தக் கோளாறுகள் ஏற்படக் கூடும். இப்போது, இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள் என்று நாம் சொல்கிறோம் அல்லவா? இது எதனால் ஏற்படுகிறது என்பதை சாஸ்திரங்கள் சொல்லும்போது, இரண்டு விதமாக சொல்கின்றன. ஒன்று, இரண்டு விதமான அணுக்கள் ஒன்றாக, ஒரே சமயத்தில் கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு வகை. இன்னொரு வகை, ஒட்டிக் கொண்டு பிறக்கிறது. இது மாதிரியான தோஷங்கள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். அதனால், நாம் எடுத்துக் கொள்ளும் அந்த ஆகாரம்தான், அந்த உணவு தான் நம் உடலுக்கும் முக்கியக் காரணமாக அமைகிறது. ஆகவே, அதுபோன்ற விபரீதமான உணவுகளை நாம் சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !