பார்த்தன் பார்த்த நரசிம்மர்!
ADDED :3245 days ago
மைசூரில் உள்ள நேத்ர நாராயணருக்கு முன்னர் உக்ர நாரசிம்மர் கோயில் உள்ளது. ஒரு சமயம் அர்ஜுனன், கிருஷ்ணனிடம் அவருடைய உக்ர நரசிம்ம அவதாரக் கோலத்தைக் காட்ட வேண்டும் என வேண்டினானாம். அதற்கு கிருஷ்ணர் அதனை தற்பொழுது காட்டிட இயலாது என்றும், ஆனால் பிரம்மனிடம் ஒரு கல்லில் உக்ர நரசிம்ம கோலத்தை வடித்து காட்டச் சொல்கிறேன். பார்த்துக் கொள்! எனவும் கூறினார். அப்படியே பிரம்மனும் ஒரு சிலையை உருவாக்க, பார்த்தன் அதனை ஆசை தீர தரிசித்து மகிழ்ந்தானாம். அப்போது பிரம்மனால் உருவாக்கப்பட்ட நரசிம்மர் சிலையே இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் நரசிம்மருடன் அருளும் தாயார் சவும்ய நாயகிக்கு வளையல் அணிவித்து வணங்கினால் விரைவில் மழலைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.